செய்திகள் மலேசியா
சபா, சரவாக்கில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்க கொள்கை அளவில் அரசாங்கம் ஒப்புதல்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல்
கோத்தா கினாபாலு:
கிழக்கு மலேசியா மாநிலங்களான சபா, சரவாக் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கொள்கை அளவில் அரசாங்கம் ஒப்புதல் அளிப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த மாற்றமானது மக்களவையில் இரு மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தை, தற்போதைய நிலையைக் காட்டிலும் நிச்சயமாக உயர்த்த வேண்டும் என்பதைப் பிரதான நிபந்தனையாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்த விரிவான விவாதங்களையும் செயலாக்க வழிமுறைகளையும் தொடங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது சபா மாநிலத்தில் 25 தொகுதிகளும், சரவாக் மாநிலத்தில் 31 தொகுதிகளும் என மொத்தம் 56 இடங்கள் உள்ளன; இது ஒட்டுமொத்தமான 222 இடங்களில் சுமார் 25 சதவீதமாகும்.
தீபகற்ப மலேசியாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்றாலும் அது சபா, சரவாக் மாநிலங்களைப் பெருவாரியாக பாதிக்க செய்யப்பட கூடாது என்று அவர் விளக்கினார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு சபா, சரவாக் மாநில முதலமைச்சர்கள் தங்களின் மனமார்ந்த நன்றியை கூட்டரசு அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் தெரிவித்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:51 pm
சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டு ஆட்சிக் கால வெள்ளி விழா: சிலாங்கூரில் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை
September 11, 2026, 3:32 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்; தனியார் துறை பணியாளர்களுக்கும் கடனுதவிகளை வழங்குகிறது: டத்தோ இப்ராஹிம் ஷா
September 11, 2026, 2:09 pm
போதும் ஆசிரியரே: அன்வாரைச் சாடிய ஜாஹித் அம்னோவால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்
September 11, 2026, 2:08 pm
