செய்திகள் மலேசியா
சபா மாநிலத்திற்கான 1.5 பில்லியன் ரிங்கிட் இடைக்கால நிதியிலிருந்து 900 மில்லியன் ரிங்கிட் இவ்வாண்டு இறுதிக்குள் வழங்கப்படும்
கோத்தா கினாபாலு:
சபா மாநிலத்திற்கான RM1.5 பில்லியன் இடைக்கால சிறப்பு நிதியில் மீதமுள்ள RM900 மில்லியன் இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்கப்படுமெனப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த நிலுவைத் தொகைக்கான ஒட்டுமொத்தப் பட்டுவாடாவும் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் முழுமையாகச் செய்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபா முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் விடுத்த சிறப்பு கோரிக்கையை ஏற்று இந்த இடைக்கால தொகை உடனடியாக
RM1.5 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக கோத்தா கினாபாலுவில் நடைபெற்ற MA63 அமலாக்க்க நடவடிக்கை மன்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பிரதமர் அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவது வட்டார பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் தேசியக் கடப்பாடாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 3:32 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்; தனியார் துறை பணியாளர்களுக்கும் கடனுதவிகளை வழங்குகிறது: டத்தோ இப்ராஹிம் ஷா
September 11, 2026, 2:09 pm
போதும் ஆசிரியரே: அன்வாரைச் சாடிய ஜாஹித் அம்னோவால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்
September 11, 2026, 2:08 pm
அம்னோ பொதுப் பேரவை பேராளர்களிடமிருந்து ரோஸ்மா மன்சோருக்கு அமோக வரவேற்பு
September 11, 2026, 12:34 pm
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மன்னிப்பு விண்ணப்பம்: அடுத்த மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்திற்கு ஒத்திவைப்பு
September 11, 2026, 12:02 pm
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தங்க ரத ஊர்வலத்துடன் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
September 11, 2026, 11:52 am
