நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகார் முதல் இழப்பீடு வரை: மலேசியாவில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வரவேண்டும்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி

கோலாலம்பூர்:

பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (KPWKM) கீழ் செயல்படும் பாலியல் துன்புறுத்தல் தீர்ப்பாய முகமை (Tags), கடந்த இரண்டு ஆண்டுகளில் 134 பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் பதிவு செய்து, அவற்றில் 90 வழக்குகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளது என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் Tags-இன் பங்கை வலியுறுத்திய அமைச்சர் ஆண்களும் குழந்தைகளும் இவர்களின் ஆதரவு சேவைகளில் உள்ளடக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ச்சியான விழிப்புணர்வு, ஆதரவு முயற்சிகளுடன், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த விரிவான நடவடிக்கைகள் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய சம்பவங்களைப் புகாரளிக்குமாறும், தீர்வு காண்பதற்குத் தேவையான ஆதாரங்களைப் பாதுகாத்து வைத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset