செய்திகள் மலேசியா
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்; தனியார் துறை பணியாளர்களுக்கும் கடனுதவிகளை வழங்குகிறது: டத்தோ இப்ராஹிம் ஷா
கோலாலம்பூர்:
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் தற்போது தனியார் துறை பணியாளர்களுக்கும் கடனுதவிகளை வழங்குகிறது.
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா இதனை கூறினார்.
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவத்தின் வாரியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக 33ஆவது ஆண்டுக் கூட்டத்தில் முடிவெடுக்க பல முடிவுகள் இன்றும் விவாதிக்கப்பட்டது.
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் கடந்த காலங்களில் அரசாங்க பணியாளர்களுக்கு தான் கடனுதவிகளை வழங்கியது.
ஆனால் இப்போது தனியார் துறை பணியாளர்களுக்கும் கடனுதவியை வழங்கவுள்ளது.
தகுதியுடையவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டுக் கூட்டத்தில் மாஹ்யா கல்வி குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமத் ஹனிபா மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு 5 லட்சம் ரிங்கிட் கல்வி உபகார சம்பளத்தை வழங்கினார்.
இக்கல்வி உபகாரச் சம்பளம் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு பயனளிக்கும்.
இவ்வேளையில் டான்ஸ்ரீ ஹனிபாவிற்கு எங்களின் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு விழா அடுத்த வருடம் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:51 pm
சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டு ஆட்சிக் கால வெள்ளி விழா: சிலாங்கூரில் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை
September 11, 2026, 2:09 pm
போதும் ஆசிரியரே: அன்வாரைச் சாடிய ஜாஹித் அம்னோவால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்
September 11, 2026, 2:08 pm
