நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ பொதுப் பேரவை பேராளர்களிடமிருந்து ரோஸ்மா மன்சோருக்கு அமோக வரவேற்பு

கோலாலம்பூர்:

தலைநகரில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் கலந்துகொண்ட அனைத்துப் பேராளர்களும் எழுந்து நிற்கச், ​​டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அவரது கணவர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மன்னிப்பு மனுவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மீது கட்சித் தலைமை, உறுப்பினர்களின் கவனம் தொடர்ந்து குவிந்திருந்த நிலையில், உற்சாகமாகக் காணப்பட்ட ரோஸ்மா ஒரு சிறப்பு விருந்தினராக அங்கு வந்திருந்தார்.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அவரை சபைக்கு அறிமுகம் செய்து வைத்தபோது, ​​இன்று அந்த மனுவுக்குச் சிறந்த முடிவு கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தார்.

அம்னோ பொதுச் சபையுடன் இணைந்து தலைவரின் கொள்கை உரையை ஆற்றியபோது அஹ்மத் ஜாஹித் கூறிய ஒரு அறிக்கையைத் தொடர்ந்து, சபை மீண்டும் பலத்த கைதட்டலால் அதிர்ந்தது.

சமீபத்திய முன்னேற்றமாக, நஜிப்பின் பொதுமன்னிப்பு மனுவை, பின்னர் தீர்மானிக்கப்படவிருக்கும் ஒரு பொதுமன்னிப்பு வாரியக் கூட்டத்திற்கு ஒத்திவைக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த ஒத்திவைப்பின் காரணமாக, முன்னாள் பிரதமரின் பொதுமன்னிப்பு மனு தொடர்பான விவகாரம் இன்றைய வாரியக் கூட்டத்தில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset