நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் அறிவியல் கூடம் திறக்கப்பட்டது: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணித திறன்களை வளர்க்க புதிய வாய்ப்பு

பினாங்கு:

மாணவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பினாங்கு ராமதாசர் தமிழ்ப் பள்ளியில் புதிய அறிவியல் கூடம் திறக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி கற்றலை மேலும் சுவாரஸ்யமானதாகவும், செய்முறை சார்ந்ததாகவும் மாற்றும் வகையில் இந்த கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் வகுப்பறையில் கற்றுக் கொள்ளும் அறிவை நடைமுறைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர். என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் வினோத் துலுகானம் கூறினார்.

Think, Create, Innovate Together’ என்ற கருப்பொருளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், மாணவர்களிடையே புதிய சிந்தனைகளைத் தூண்டுவதுடன், அவர்களின் படைப்பாற்றல், கண்டுபிடிப்பு ஆர்வத்தை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது சிந்தனைகளைச் செயல்வடிவமாக மாற்றுவதற்கும், புதிய யோசனைகளை உருவாக்குவதற்கும், அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான செய்முறை அனுபவங்களைப் பெறுவதற்கும் இந்த ‘மேக்கர் லேப்’ உதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டர்.


விழாவில் Phill-Orient Logistics Group of Companies நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர் என். ஜெய் சங்கர் தம்பையா, Prolific Cargo Services (PG) Sdn. Bhd. நிறுவனத்தைச் நிர்வாக இயக்குனர் ராஜன் பச்சமுத்து, ஆகியோர் கலந்து கொண்டு புதிய ‘மேக்கர் லேப்’பை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

சுமார் 50 ஆயிரம் ரிங்கிட் செலவில் நிர்வாகிக்கப்பட்ட
புதிய STEM அறைக்கான மொத்த செலவுகளை மேல் குறிப்பிட்ட நிறுவனம் ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset