செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மன்னிப்பு விண்ணப்பம்: அடுத்த மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்திற்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மன்னிப்பு கோரிக்கை தொடர்பான விண்ணப்பம் அடுத்த மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியானது
நஜிப்பின் மீதான இந்த மன்னிப்பு மனுவை அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்க மாமன்னர் ஒப்புதல் அளித்தார். மலேசியாவின் முன்னாள் பிரதமரான 72 வயது நஜிப் ரசாக் தற்போது காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் SRC இன்டர்நேஷனல் மற்றும் 1MDB தொடர்பான ஊழல் வழக்குகளில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டு வருகிறார். மாமன்னர் தலைமையில் நடைபெற்ற தற்போதைய கூட்டத்தில் கைதிகளின் விடுதலை தொடர்பான பல்வேறு விவகாரங்களும் ஆராயப்பட்டன.
இதன்போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 65 கைதிகளை விடுதலை செய்ய சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கினார். விடுதலை செய்யப்படும் அனைத்து வெளிநாட்டுக் கைதிகளும் முறையான நடைமுறைகளின் கீழ் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் அவரவர் நாடுகளுக்குத் deport செய்யப்பட வேண்டும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 12:02 pm
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தங்க ரத ஊர்வலத்துடன் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
September 11, 2026, 11:52 am
16ஆவது பொதுத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: அதுவே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது
September 11, 2026, 11:51 am
சீன, இந்தியர்களின் வாக்குகளின் அதிகரிப்பு; மஇகா, மசீசவின் வெற்றிக்குச் சான்றாகும்: அஷ்ராஃப்
September 11, 2026, 11:48 am
ஹெலிகாப்டர் விபத்து; விமானி, மருத்துவரின் வாரிசுகள் பெர்கேசோ இழப்பீடு பெறத் தகுதியுடையவர்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
September 11, 2026, 11:39 am
மீன்பிடிப் படகை மீட்க சுங்கை பேராக் ஆற்றில் குதித்த ஆடவர் நீரில் மூழ்கினார்
September 11, 2026, 11:30 am
மாரான் பல்பொருள் அங்காடி கழிவறையில் இளைஞரை ரகசியமாக புகைப்படம், வீடியோ எடுத்த அரசு ஊழியர் கைது
September 11, 2026, 11:29 am
