நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: அதுவே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது

கோலாலம்பூர்: 

16ஆவது பொதுத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி அழைப்பு விடுத்துள்ளார். 

இந்தத் தேர்தல் அழைப்பு என்பது வெறும் அரசியல் அழுத்தமல்ல, மாறாக இது ஒட்டுமொத்த மக்களின் உண்மையான எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் உள்ளது.

கடந்த எட்டு வருட கால அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகு, அம்னோ தற்போதைய அரசியல் யதார்த்தத்திற்கு ஏற்ப தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டுள்ளது. 

எதிர்க்கட்சியாகவும், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டாளியாகவும் மாறிவரும் சூழ்நிலையில் கட்சி தனது போராட்டத்தின் உண்மையான அர்த்தத்தை மீட்டுள்ளது.

சுமார் 3,000 தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். 

கட்சித் தலைவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தற்போதைய காலத்தின் தேவைகளைப் புரிந்து கொண்டு முழுமையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும் என்றார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset