செய்திகள் மலேசியா
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தங்க ரத ஊர்வலத்துடன் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
கோலாலம்பூர்:
தலைநகர் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தங்க ரத ஊர்வலம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
இவ்வாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
மலேசியாவில் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
வரும் செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலை 7 மணிக்கு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு கொடியேற்று வைபவம் நடைபெறும்.
இரவு 7.30 மணிக்கு ஶ்ரீ கணேசர் பெருமான் தங்க ரதத்தில் தலைநகரை சுற்றி வலம் வருவார்.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் தேதி காலை முதல் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதிகமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவஸ்தானம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொண்டு ஶ்ரீ கணேசர் பெருமானின் அருளை பெற்று செல்லுமாறு டான்ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 12:34 pm
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மன்னிப்பு விண்ணப்பம்: அடுத்த மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்திற்கு ஒத்திவைப்பு
September 11, 2026, 11:52 am
16ஆவது பொதுத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: அதுவே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது
September 11, 2026, 11:51 am
சீன, இந்தியர்களின் வாக்குகளின் அதிகரிப்பு; மஇகா, மசீசவின் வெற்றிக்குச் சான்றாகும்: அஷ்ராஃப்
September 11, 2026, 11:48 am
ஹெலிகாப்டர் விபத்து; விமானி, மருத்துவரின் வாரிசுகள் பெர்கேசோ இழப்பீடு பெறத் தகுதியுடையவர்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
September 11, 2026, 11:39 am
மீன்பிடிப் படகை மீட்க சுங்கை பேராக் ஆற்றில் குதித்த ஆடவர் நீரில் மூழ்கினார்
September 11, 2026, 11:30 am
மாரான் பல்பொருள் அங்காடி கழிவறையில் இளைஞரை ரகசியமாக புகைப்படம், வீடியோ எடுத்த அரசு ஊழியர் கைது
September 11, 2026, 11:29 am
