நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குற்றம்சாட்டப்பட்ட டத்தோ ஸ்ரீ அப்துல் அஜீஸின் சட்டையின் நிறத்தை மட்டும் மாற்றி உள்ளார்கள்: பிரதமர் கூறியது ஏன் பின்பற்றப்படவில்லை?: அக்மல் சாலே கேள்வி

கோலாலம்பூர்: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) ஆரஞ்சு நிறச் சீருடையில் சந்தேக நபர்கள் இனி நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊதா நிறக் காவல் நிலைய உடை , விலங்கு (handcuffs) பயன்படுத்தப்படுவது குறித்து அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மது அக்மல் சாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கு நடைபெற்ற அம்னோ இளைஞர் பிரிவுப் பிரதிநிதிகள் மாநாட்டில் தனது கொள்கை உரையை நிகழ்த்தும்போது  பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆரஞ்சு நிறச் சட்டைகள் இருக்காது என்று கூறினார்; ஆனால் இப்போது அவர்கள் நிறத்தை 'மாற்றியுள்ளனர்'. இப்போது அது ஊதா நிறமாக உள்ளது."

முன்னாள் 'தபோங் ஹாஜி' (Tabung Haji) தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம், ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ​​விலங்கு அணிந்து ஊதா நிறக் காவல் நிலைய உடையை அணிந்திருந்த மறுநாளே அக்மல் சலேவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

அஜீஸ் அந்த உடையையும் விலங்கையும் அணியத் தானே முன்வந்ததாக MACC கூறியது.

ஆனால் அவரது வழக்கறிஞர் டத்தோ ஆமர் ஹம்சா அர்ஷாத் இந்தக் கூற்றை மறுத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset