நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு 

ஷா ஆலாம்: 

வீட்டுமனை முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை மேலாளர் சலுகைக்காக தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் புரிந்ததாக இரு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். 

ஷா ஆலாம் நீதிமன்றத்தில் எம்.ஏ.சி.சி விண்ணப்பத்தை பரிசீலித்த மாஜிஸ்திரெட் வான் நூரா நிசா ஙாடிரின், இந்த நீதிமன்ற தடுப்பு காவலை இரு நாட்களுக்கு விதித்தார்

முன்னதாக, சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் சந்தேக நேற்று மதியம் 2 மணியளவில் கைது செய்யப்பட்டதாக எம்.ஏ.சி.சி தரப்பு தெரிவித்தது 

அந்நிறுவனத்தின் தலைமை மேலாளராக இருந்த போது 2023, 2025 ஆண்டுகளில் தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதாக சந்தேக நபர் குற்றங்களைப் புரிந்தார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது 

சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி தலைவர் அஸ்வான் ரம்லி அவரின் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி சட்டத்தின் செக்‌ஷன் 23இன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset