நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் உயர்வு மடானி திட்டத்தின் கீழ் 159 வணிகர்களுக்கு 4.48 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்

பிரிக்பீல்ட்ஸ்:

மித்ராவின் உயர்வு மடானி திட்டத்தின் கீழ் 159 வணிகர்களுக்கு இன்று 4.48 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

இந்திய வணிகர்களுக்கு கைகொடுக்கும் நோக்கில் மித்ராவின் கீழ் இந்த உயர்வு மடானி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு நிதிகள் கிராண்டாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிதியை கொண்டு வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.


குறிப்பாக இந்நிதியை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 159 இந்திய வர்த்தகர்களுக்கு உயர்வு மடானி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 4.486 மில்லியன் ரிங்கிட் நிதி அவ்வணிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிதி நிச்சயம் வணிகர்களுக்கு பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

மித்ராவின் உயர்வு மடானி திட்டத்திற்கு இந்திய வணிகர்களிடம் இருந்து பெருமளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதனால் மித்ராவின் உயர்வு மடானி 2.0 திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 25 மில்லியன் ரிங்கிட்டை மித்ரா ஒதுக்கியுள்ளது.

வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்திற்குள் வணிகர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திப்ண் நாகராஜன்







தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset