செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமை அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரை ஆட்சியிலிருந்து அகற்றும் ஆவணத்தை கட்டாயப்படுத்தப்பட்டு கையொப்பமிட்டதாக கூறியது தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
அம்னோ பொதுப்பேரவையின் நடுவே இஸ்மாயில் லாசிம் தம்மை சந்தித்து விளக்கம் அளிப்பார் என்று எண்ணுவதாக அஹ்மத் ஸாஹித் ஹமிடி குறிப்பிட்டார்.
முன்னதாக நெகிரி செம்பிலான் ஆட்சியாளரை ஆட்சியிலிருந்து அகற்றும் விவகாரத்தில் இஸ்மாயில் லாசிம் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான தகவலை மந்திரி பெசார் மறுத்துள்ள நிலையில் இது குறித்து போலிஸ் புகார் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.
நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி தலைமையிலான மாநில அரசாங்கம் ஆட்சியை வழிநடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:05 pm
மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது: கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதி
September 10, 2026, 1:25 pm
