நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து 

கோலாலம்பூர்: 

நம்பிக்கை கூட்டணி- அம்னோ அரசியல் ஒத்துழைப்பு என்பது வெறும் தற்காலிகமானதே என்று ஜொகூர் மாநில அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அஸ்லீன் அம்ப்ரோஸ் கூறினார். 

15ஆவது பொதுத்தேர்தல் வரை மட்டுமே இந்த ஒற்றுமை அரசாங்கம் இருக்கும் என்றும் அதன் பிறகு அம்னோ 16ஆவது பொதுத்தேர்தலை எந்த அரசியல் கூட்டணியுடனும் பயணிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

மீண்டும் ஆட்சிக்கு வருவது தான் எங்களின் முதன்மையான இலக்காகும் என்று அவர் திட்டவட்டமாக சொன்னார். 

நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கை செலவீனம், வேலை வாய்ப்பு போன்ற விவகாரங்களில் அம்னோ முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்லீன் கேட்டுக்கொண்டார் 

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி - அம்னோ இடம்பெற்றிருக்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset