நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை

கோலாலம்பூர்:

மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்புக் நம்பிக்கை கூட்டணியுடன் அறிவிக்க வேண்டாம்.

அம்னோ இளைஞர் பிரிவு கட்சியின் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வலுவான அடிமட்ட ஆதரவைப் பெறுவதற்காக, உம்மா ஒருங்கிணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மலாக்கா தேர்தலைஒரு தளமாகப் பயன்படுத்திக்கொள்ள அம்னோ விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மது அக்மால் சாலே கூறினார்.

மேலும், மலாக்கா தேர்தலில் அம்னோ ஒருங்கிணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், தேசிய முன்னணியை எவ்வாறு பெரும்பான்மையுடன் மாநில அரசாங்கத்தின் தலைவராகத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதற்கும் அவர் ஒரு விளக்கத்தை அளித்தார்.

மலாக்கா தேர்தல் என்பது நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள விரும்புவது மட்டுமல்ல, விழிப்புணர்வை கொள்கைகளாகவும் வாழ்க்கையாகவும் மாற்ற முடியுமா என்பதற்கான எங்கள் சோதனைக்களமும் ஆகும்.

ஜொகூரில் நாங்கள் தொடங்கிவிட்டோம், நெகிரி செம்பிலானும் அதை நிரூபித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும் 'நீலமாக' மாறியுள்ளன.

எனவே, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் நல்லெண்ணத்துடன், நாம் மலாக்காவையும் 'நீலமாக' மாற்ற வேண்டும், என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற பிரிவின் பொதுப் பேரவையையொட்டி அம்னோ இளைஞர் தலைவரின் கொள்கை உரையின் போது கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset