செய்திகள் மலேசியா
மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது: கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதி
கோலாலம்பூர்:
மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், மன்னிப்பு வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் ஹன்னா இயோ மேலதிக தகவல்களை வழங்க மறுத்தார்.
முன்னதாக மன்னிப்பு வாரியம் அதன் கூட்டத்தை இந்த வாரத்தில் நடத்தவுள்ளதாக இதற்கு முன் FMT செய்தி தளம் செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மன்னிப்பு தொடர்பான விண்ணப்பம் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காஜாங் சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வருகிறார்.
72 வயதான நஜிப் ரசாக், எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் வழக்கில் 42 மில்லியன் ரிங்கிட் மோசடி புரிந்ததாக அவருக்கு 12 ஆண்டுகள் சிறை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது
அதன்பிறகு கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் அவரது சிறைத் தண்டனையை ஆறு ஆண்டுகளாகப் பாதியாகக் குறைத்து, அபராதத்தையும் RM50 மில்லியனாகக் குறைத்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:16 pm
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
September 10, 2026, 1:25 pm
