செய்திகள் மலேசியா
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு ஒருபோதும் மறக்கவில்லை என்று அதன் தலைவர் நோராய்னி அஹ்மத் கூறினார்.
அம்னோ முன்னாள் தலைவர் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்காக நீதி, கருணையின் கதவு திறக்கப்பட நாங்கள் எப்போதும் பிரார்த்தனை செய்வோம்.
இன்று அம்னோ மகளிர் பொதுப் பேரவையை ஒட்டி ஆற்றிய தனது கொள்கை உரையில்,
அம்னோ, நாட்டிற்காக தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை தியாகம் செய்த முந்தைய தலைவர்களில் நஜிப்பும் ஒருவர் என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தை உருவாக்க நாம் வரலாற்றை அழிக்க வேண்டியதில்லை.
மேலும் தேசிய வளர்ச்சி, பொருளாதார மாற்றம், உள்கட்டமைப்பு, மக்களுக்கு உதவி மற்றும் அம்னோவின் போராட்டம் ஆகியவற்றில் நஜிப்பின் பங்களிப்புகள், அரசியல் மாறிவிட்டது என்பதற்காக மட்டும் மறுக்க முடியாத நாட்டின் பயணத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:16 pm
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
September 10, 2026, 3:05 pm
மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது: கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதி
September 10, 2026, 1:25 pm
