நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகேபியின் திட்டங்கள், சேவைகளை கண்டு தென் கொரியக் கூட்டுறவுப் பிரதிநிதிகள் வியப்படைந்தனர்: தங்கராஜ்

கோலாலம்பூர்:

கேகேபியின் திட்டங்கள், சேவைகளை கண்டு தென் கொரியக் கூட்டுறவுப் பிரதிநிதிகள் வியப்படைந்தனர்.

கேகேபி எனப்படும் மலேசிய தொழிலாளர் கூட்டுறவு நாணய நிறுவனம் தலைவர் தங்கராஜ் இதனை கூறினார்.

மலேசியாவுக்கு வருகை புரிந்த தென் கொரியக் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், மலேசிய தொழிலாளர் கூட்டுறவு நாணய நிறுவன நிர்வாகிகளுடன் சிறப்புச் சந்திப்பொன்றை நடத்தினர்.

இச்சந்திப்பில் தென் கொரியாவைச் சேர்ந்த சுமார் 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மலேசியத் தொழிலாளர் கூட்டுறவு நாணய நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் நிர்வாக முறைகள் குறித்து அறிந்துகொள்வதில் தென் கொரியப் பிரதிநிதிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

குறிப்பாக, கூட்டுறவுச் சங்கம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்கள், சங்கத்தின் நிர்வாக நடைமுறைகள், ஊதியமின்றி தன்னார்வ அடிப்படையில் உறுப்பினர்கள் ஆற்றிவரும் சேவைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.

கடந்த சில காலமாக இரு தரப்புக்கும் இடையிலான தொடர்பு குறைந்திருந்த நிலையில், அந்த உறவை மீண்டும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் கூட்டுறவுத் துறையில் இணைந்து செயல்படுவதற்கான விருப்பத்தையும் தென் கொரியப் பிரதிநிதிகள் வெளிப்படுத்தினர்.

இதனிடையே, மலேசியத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பணிகள், சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்குமாறு சங்கத்தின் செயலாளரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இச்சந்திப்பு, மலேசியா–தென் கொரியா கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதுடன், அனுபவங்கள் மற்றும் நிர்வாகத் திறன்களைப் பகிர்ந்துகொள்வதற்கான முக்கியத் தளமாகவும் அமைந்தது என்று தங்கராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset