செய்திகள் மலேசியா
பேரரசரின் மன்னிப்பு அதிகாரத்தை நம்பிக்கை கூட்டணி விமர்சனம் செய்ததில்லை: கெஅடிலான் இளைஞர் பிரிவு அறிக்கை
கோலாலம்பூர்:
நம்பிக்கை கூட்டணி ஒருபோதும் பேரரசரின் மன்னிப்பு அதிகாரத்தை விமர்சனம் செய்ததில்லை என்று கெஅடிலான் இளைஞர் படையின் தகவல் பிரிவு தலைவர் டனிஷ் ஹைருதின் கூறினார்.
நம்பிக்கை கூட்டணி ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நீதிமன்ற முடிவுகள், சட்ட திட்டங்கள் போன்ற விவகாரங்களில் அதன் கவனத்தை கொள்ளுமே தவிர அரசவை அல்லது அரச கழகத்தின் விவகாரங்களைத் தொடாது என்று அவர் திட்டவட்டமாக சொன்னார்.
முன்னதாக, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், மாமன்னரின் மன்னிப்பு அதிகாரம் குறித்து கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்று அம்னோவைச் சேர்ந்த தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரின் இந்த கேள்வி நம்பிக்கை கூட்டணி- தேசிய முன்னணி இடையே பெரும் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மாமன்னரின் மன்னிப்பு அதிகாரம் குறித்து நம்பிக்கை கூட்டணி ஒருபோதும் எந்தவொரு வாக்கியத்திலும் விமர்சனம் செய்யவில்லை என்று அவர் திட்டவட்டமாக சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:16 pm
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
September 10, 2026, 3:05 pm
மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது: கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதி
September 10, 2026, 1:25 pm
