செய்திகள் மலேசியா
குளுவாங்கில் வீடு தீ பற்றி எரிந்ததில் தாயும், 2 மகன்கள் உயிரிழந்தனர்
குளுவாங்:
தாமான் தித்திவாங்சாவில் உள்ள இரண்டு மாடி அடுக்கு வீட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தாயும் அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 49 வயதான நொரைனி இப்ராஹிம், 18 வயதான கைருல் நூர் ஹாஜிக் கைருல்நிஜாம் 11 வயதான கைருல் நூர் ஹதிஃப் கைருல்நிஜாம் ஆகியோர் அடங்குவர்.
ஜொகூர் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 10.44 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது.
சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு குளுவாங் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 14 பேர் சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 அடிக்கு 70 அடி அளவுள்ள இரண்டு மாடி அடுக்கு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டின் கட்டமைப்பில் சுமார் 50% எரிந்து நாசமானது.
வீட்டிற்குள் மூன்று பேர் சிக்கியிருந்தனர், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சு அதிகாரிகள் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதை உறுதி செய்தனர் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:16 pm
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
September 10, 2026, 3:05 pm
மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது: கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதி
September 10, 2026, 1:25 pm
