செய்திகள் உலகம்
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
சிங்கப்பூர்:
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம்
S$2.2 மில்லியன் வெள்ளியில் இருந்து 3.2 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி வரை
உயர்த்தப்பட உள்ளது.
சிங்கப்பூர் அரசு, திறமையானவர்களை அரசியலுக்குக் கொண்டு வரவும், நல்ல நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையிலும் அரசியல் தலைவர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
இதன்படி, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு அதிகரிக்க உள்ளது. ஏற்கெனவே உலகின் அதிக சம்பளம் பெறும் பிரதமராக சிங்கப்பூர் பிரதமர் உள்ள நிலையில், மேலும் 64% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல அந்நாட்டு துணைப் பிரதமரின் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு ஊதியம் 1.8 மில்லியனில் இருந்து 3 மில்லியன் வெள்ளி வரை அதிகரிக்கிறது.
கேபினட் அமைச்சர்களின் ஊதியம், அவர்களின் பதவி மூப்பு, பொறுப்புகளுக்கு ஏற்ப சுமார்
1.8 மில்லியனிலிருந்து 2.8 மில்லியன் வரை உயர்த்தப்படும். எனினும், இவை நிர்ணயிக்கப்பட்ட ஊதிய அளவுகள் மட்டுமே.
அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக இந்த முழுத் தொகையையும் பெறமாட்டார்கள். அக்.15 முதல் ஒருமுறை அதிகபட்சமாக 9% ஊதிய உயர்வு வழங்கப்படும்.
அதன் பின்னர், ஊதிய மாற்றங்கள் தனிநபரின் செயல்திறன், பொறுப்புகளின் அடிப்படையில் இருக்கும்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:00 am
மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது
September 9, 2026, 10:14 pm
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
