செய்திகள் உலகம்
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம். அவரவர் வீடுகளில் மட்டும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள் என்று பல்வேறு இந்து அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன.
அமெரிக்காவில் சுமார் 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.
கலிபோர்னியா, டெக்சாஸ், நியூஜெர்ஸி, நியூயார்க், புளோரிடா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்து வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி பிரம்மாண்டமாக விழாவை கொண்டாடுவது வழக்கம். அது அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் பொது மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாக இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அமெரிக்காவின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பல்வேறு இந்து அமைப்புகள் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்துக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி வருகின்றன.
அந்த அமைப்புகள் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டுகிறோம். குடியிருப்புகள், காலனிகள், சாலைகள், தெருக்கள், பொது இடங்களில் விழாவைக் கொண்டாட வேண்டாம்.
இவ்வாறு இந்து அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
