நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட இருவரில் முன்னாள் பெல்டா தலைமை இயக்குநரும் அடங்குவார்

புத்ராஜெயா:

கையாடல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், டத்தோ என்ற பட்டத்துடன் கூடிய முன்னாள் பெல்டாதலைமை இயக்குநர் உட்பட இருவரை எம்ஏசிசி கைது செய்துள்ளது.

60, 50 வயதுகளில் உள்ள அந்த இருவரும், இன்று பிற்பகல் 4 மணிக்கு புத்ராஜயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

கோலாலம்பூரில் ஒரு திட்டத்திற்காக ஒரு கட்டுமான நிறுவனத்தை நியமிப்பதில் அந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

சட்டப்பூர்வ அமைப்பிற்குச் சொந்தமான நிலத்தை, அந்த கட்டுமான நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் குழு, துணை நிறுவனத்தின் அனுமதியின்றி இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் இந்தக் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கு, ஊழல் தடுப்பு ஆணையம் சட்டம் 2009-இன் பிரிவு 16இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset