நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3,452 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 1,035,600 ரிங்கிட் பள்ளி பேருந்து கட்டண உதவி நிதி; சிலாங்கூர் மாநில அரசு வழங்கியது: பாப்பாராயுடு

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநில அரசு 3,452 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 1,035,600 ரிங்கிட் பள்ளி பேருந்து கட்டண உதவி நிதியை இன்று வழங்கியது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயனளிப்பதுடன் பெற்றோர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

அவ்வகையில் இவ்வாண்டு 3,452 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 1,035,600 ரிங்கிட் பள்ளி பேருந்து கட்டண உதவி நிதி வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்நிதி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

மேலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களை சிலாங்கூர் மாநில் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

சிலாங்கூர் மாநில அரசின் தலைமையகத்தில் நடைபெற்ற உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் பாப்பாராயுடு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

இவ்விழாவில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பாடுப்பட்ட 10 தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset