நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில இந்தியர்களின் நீண்டக் கால பிரச்சினையான ஈமக்காரிய நில விவகாரத்திற்கு தீர்வு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு

சிரம்பான்:

மலாக்கா மாநில இந்தியர்களின் நீண்டக் கால பிரச்சினையான ஈமக்காரிய நில விவகாரத்திற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை அறிவித்தார்.

மலாக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஈமக்காரியம் செய்ய இடமில்லை என்ற பிரச்சினை ஒரு தொடர் கதையாக இருந்து வந்தது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தேசிய முன்னணி தலைவர்களும் நம்பிக்கை கூட்டணி தலைவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மலாக்கா மாநில இந்தியர்களுக்கான ஈமக்காரியம் செய்யும் இடப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோ அப்துல் ரவுஃப், ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முயற்சியில் தற்போது 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதல் அனைத்தும் முறையாக வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அங்கு ஈமக்காரியங்கள் செய்வதற்காக மூன்று மண்டபங்களும் கட்டப்படவுள்ளது.

இதற்கான பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும்.

ஆக மொத்தத்தில் மலக்கா மாநில இந்தியர்களிடையே நிலவி வந்த பிரச்சனைக்கு ஒரு சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது.

இதற்காக போராடிய உழைத்த அனைத்து தலைவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset