நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

நாட்டில் அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இதனை கேட்டுக் கொண்டார்.

தற்போது நீண்ட காலமாகவே அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

ஒரு மருத்துவர் அதிக நோயாளிகளை கண்காணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதனால் அந்த மருத்துவருக்கு களைப்பு மற்றும் அசதி ஏற்படும்.

இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகமான மருத்துவர்கள் பணிகளில் அமர்த்தப்பட வேண்டும்.

மேலும் மருத்துவர்கள் மற்றும் குடும்பங்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு பணி இடமாற்றம் செய்ய வேண்டும்.

அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை அரசு உணர வேண்டும்.

இன்று நடைபெற்ற பிபிபி மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின் டத்தோ லோகபாலா செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset