செய்திகள் மலேசியா
முஸ்லிம்கள் தங்களுடைய சமூக நலனில் மட்டும் சுருங்கிவிடாமல், அவர்கள் வாழும் நாடுகளின் முழு சமூகத்திற்கும் நன்மை செய்ய வேண்டும்: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் சாததுல்லஹ் ஹுசைனி
கோலாலம்பூர்:
இந்தியாவில் வளர்ந்து வரும் மதவாதப் பாசிச சக்திகள், அதன் தாக்கம், இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் குறித்து கவலையான சூழல் நிலவுகிறது என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் செய்யது சாததுல்லஹ் ஹுசைனி கூறினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் இந்துத்துவ இயக்கத்தை வெறும் மதவாத இயக்கமாக மட்டுமல்லாமல், பாசிச இயக்கமாகவும் உயர் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சி என்றும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைக்கு வெறும் எதிர்ப்பு அல்லது குறுகியகால நடவடிக்கைகள் மட்டும் போதாது. அவர்களுக்கு ஒரு தெளிவான சிந்தனை, இலக்கு, நீண்டகாலத் திட்டம் தேவை என்றார் அவர்.
உலக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய நெருக்கடிகள்:
1. மூலோபாய நெருக்கடி — இலக்கு, நோக்கம், எதிர்காலப் பாதை பற்றிய தெளிவின்மை.
2. ஒழுக்க, மதிப்புக் குறைபாடு — இஸ்லாமிய நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள் வாழ்க்கையில் நடைமுறையாக இல்லாமை.
முஸ்லிம்கள் தங்களுடைய சமூக நலனில் மட்டும் சுருங்கிவிடாமல், அவர்கள் வாழும் நாடுகளின் முழு சமூகத்திற்கும் நன்மை செய்ய வேண்டும்.
அவர்கள் அந்த நாடுகளில் இஸ்லாமின் தூதர்களாகவும், நீதியின் பிரதிநிதிகளாகவும் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் தற்போதைய நெருக்கடியை வெறும் அச்சுறுத்தலாக மட்டும் பார்க்காமல், அது ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பாகவும் கருதப்பட வேண்டும்.
குறுகியகால நடவடிக்கைகளாக, அநியாயமாக கைது செய்யப்படுபவர்களுக்கு சட்ட உதவி, குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு, கல்வி, பொருளாதார உதவி போன்றவை அவசியம். அதனை ஜமாஅத்தே இஸ்லாமி முன்னெடுத்து வருகிறது.
நீண்டகாலத் திட்டத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள்:
1. இந்தியாவின் பெரும்பான்மை முஸ்லிம் அல்லாத மக்களிடம் இஸ்லாமின் செய்தியை அறிவார்ந்த முறையில் கொண்டு சேர்ப்பது நமது கடமை.
முஸ்லிம் சமூகத்தின் ஒழுக்க, கல்வி, சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.
முடிவாக, தற்போதைய குழப்பமான சூழ்நிலை, சரியான சிந்தனை, செயல்திட்டத்துடன் அணுகப்பட்டால், இந்தியாவின் வரலாற்றில் ஒரு பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பாக மாறக்கூடும் என்று சாததுல்லாஹ் ஹுசைனி வலியுறுத்தினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 10:24 pm
எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட இருவரில் முன்னாள் பெல்டா தலைமை இயக்குநரும் அடங்குவார்
September 6, 2026, 10:22 pm
ரோஹிங்கியா ஐநா அகதிகள் அட்டை வைத்திருப்பவர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல: டத்தோ ஜக்காரியா
September 6, 2026, 10:21 pm
ஜொகூர், நெகிரி செம்பிலானில் தொடங்கிய 'நீல அலை' மலாக்காவிலும் தொடரும்: ஜாஹித்
September 6, 2026, 2:23 pm
நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ லோகபாலா
September 6, 2026, 12:52 pm
