நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம் காரணமாக பின்துலுவில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 11 வரை மூடப்படுகின்றன

பிந்துலு:

புகைமூட்டம் காரணமாக காற்றுத் தரக் குறியீடு (API) 200-ஐத் தாண்டியதால், பின்துலுவில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 11 வரை இணையவழிக் கல்வியை மேற்கொள்ளவுள்ளன.

சரவாக்கின் பின்துலு பிரிவில் உள்ள மொத்தம் 54 தொடக்கப் பள்ளிகள், ஒன்பது இடைநிலைப் பள்ளிகள், புகைமூட்டத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்தான காற்றுத் தர நிலை காரணமாக செப்டம்பர் 7 முதல் 11 வரை மூடப்பட்டு, அதற்குப் பதிலாக வீட்டிலிருந்தே கற்கும் முறை செயல்படுத்தப்படும்.

காற்றுத் தரக் குறியீடு (API) மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், காற்றுத் தரக் குறியீட்டு நிலைகள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து அறிந்து வைத்திருக்கவும் சரவாக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மாணவர்கள், பணியாளர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதோடு, சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset