செய்திகள் மலேசியா
2040க்குள் 100,000 இந்தியர்களை தொழில்முனைவர்களாக உருவாக்க வேண்டும்: டத்தோ டாக்டர் சண்முகநாதன் வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
வரும் 2040க்குள் 100,000 இந்தியர்களை தொழில்முனைவர்களாக உருவாக்க வேண்டும்.
சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சண்முகநாதன் இதனை வலியுறுத்தினார்.
இந்திய அரசு சாரா இயக்கங்கள், வர்த்தக சம்மேளனங்கள் ஆகியவற்றின் தலைவர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்து பேசினார்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் பேசிய பிரதமர் மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
சில காரணங்களால் இதனை வெளியே சொல்ல முடியாது என பிரதமர் கூறினார்.
எது எப்படியிருந்தாலும் இந்திய அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்காக மேற்கொண்ட திட்டங்கள் அனைத்தும் தெளிவாக பதிவாகி இருக்கும்.
அதை பற்றி நாம் விவாதிக்க வேண்டியது இல்லை.
ஆனால் இதுவரை மித்ராவின் வாயிலாக 1.6 பில்லியன் ரிங்கிட் வழங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த நிதியை கொண்டு எத்தனை இந்தியர்களின் வாழ்க்கை உருமாற்றம் கண்டது என்பது தான் என்னுடைய கேள்வி.
இதற்கான ஆதாரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக டத்தோ சண்முகநாதன் கூறினார்.
ஒவ்வொரு பட்ஜெட்டில் மலாய்க்காரர்களுக்கு நிதி ஒதுக்குவதை பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது. அது அவர்களின் உரிமையாகும்.
ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 10% இந்திய சமுதாயத்திற்கான ஒதுக்க வேண்டும்.
இந்த நிதியின் மூலம் அதிகமான வர்த்தகர்களை உருவாக்க முடியும்.
குறிப்பாக வரும் 2040க்குள் 100,000 இந்தியர்களை தொழில்முனைவர்களாக
உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 2:23 pm
நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ லோகபாலா
September 6, 2026, 12:52 pm
அந்நியத் தொழிலாளர் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சார்லஸ் சந்தியாகோ எச்சரிக்கை
September 6, 2026, 11:06 am
சுதந்திர தின ஒற்றுமை ஓட்டம்; மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே முதன்மை இலக்காகும்: எம்பி ராஜா
September 6, 2026, 9:59 am
புகைமூட்டம் காரணமாக பின்துலுவில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 11 வரை மூடப்படுகின்றன
September 5, 2026, 10:39 pm
காற்று மாசுபாடு குறியீடு 400-ஐத் தாண்டினால் அவசர நிலையை அறிவிக்க அரசு தயாராக உள்ளது
September 5, 2026, 10:38 pm
