செய்திகள் மலேசியா
காற்று மாசுபாடு குறியீடு 400-ஐத் தாண்டினால் அவசர நிலையை அறிவிக்க அரசு தயாராக உள்ளது
புத்ராஜெயா:
400க்கு மேல் காற்று மாசுபாடு குறியீடு (ஏபிஐ) அளவுகள் பதிவாகும் பகுதிகளில் அவசரநிலையை அறிவிக்க அரசு முன்மொழியக்கூடும்.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் இதனை கூறினார்.
மிகவும் அபாயகரமானது என வகைப்படுத்தப்படும் 400-க்கு மேற்பட்ட ஏபிஐ அளவுகள், நிலையான புகைமூட்ட மேலாண்மை நடைமுறைகளுக்கு இணங்க அவசரநிலை பிரகடனத்திற்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுவரை, செரியான் மட்டுமே அபாயகரமான அளவுகளைப் பதிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் கூச்சிங், சமரஹான், ஸ்ரீ அமான் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு நிலையங்களில் மிகவும் ஆரோக்கியமற்ற அளவுகள் பதிவாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை செரியானில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம், ஏபிஐ பாதுகாப்பான நிலைக்குக் குறையும் வரை அமலில் இருக்கும்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் பள்ளிகளை மூடுவது மற்றும் முகக்கவசம் அணிவது ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 2:23 pm
நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ லோகபாலா
September 6, 2026, 12:52 pm
அந்நியத் தொழிலாளர் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சார்லஸ் சந்தியாகோ எச்சரிக்கை
September 6, 2026, 11:06 am
சுதந்திர தின ஒற்றுமை ஓட்டம்; மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே முதன்மை இலக்காகும்: எம்பி ராஜா
September 6, 2026, 9:59 am
புகைமூட்டம் காரணமாக பின்துலுவில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 11 வரை மூடப்படுகின்றன
September 5, 2026, 10:38 pm
மீபா இளையோர் கால்பந்து போட்டியின் மகளிர் பிரிவில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி சாம்பியன்
September 5, 2026, 10:37 pm
