செய்திகள் மலேசியா
மீபா இளையோர் கால்பந்து போட்டியின் மகளிர் பிரிவில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி சாம்பியன்
ஜார்ஜ்டவுன்:
மீபா இளையோர் கால்பந்து போட்டியின் மகளிர் பிரிவில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மீபா - ஏய்ம்ஸ்ட் இளையோர் கால்பந்து போட்டி பினாங்கு போலோ அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 20 குழுக்கள், பெண்கள் பிரிவில் 10 குழுக்கள் கலந்து கொண்டன.
கடும் சவால்களுக்கு மத்தியில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் மகளிர் அணி இறுதியாட்டத்தில் களமிறங்கியது.
இதில் சிலாங்கூர் அணி 2-0 என்ற பெனால்டி கோல் கணக்கில் ஜொகூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அவ்வணிக்கு 1,000 ரிங்கிட்டும் வெற்றி கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது.
அதே வேளையில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஆண்கள் அணி காலிறுதி சுற்றுடன் வெளியேறினர்.
பல மாதங்கள் பயிற்சிகளுக்கு பின் பெட்டாலிங் மாவாட்ட கால்பந்து சங்க அணி இப்போட்டியில் களமிறங்க வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள் என்று சங்கத்தின் தலைவர் பத்துமலை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 2:23 pm
நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ லோகபாலா
September 6, 2026, 12:52 pm
அந்நியத் தொழிலாளர் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சார்லஸ் சந்தியாகோ எச்சரிக்கை
September 6, 2026, 11:06 am
சுதந்திர தின ஒற்றுமை ஓட்டம்; மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே முதன்மை இலக்காகும்: எம்பி ராஜா
September 6, 2026, 9:59 am
புகைமூட்டம் காரணமாக பின்துலுவில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 11 வரை மூடப்படுகின்றன
September 5, 2026, 10:39 pm
காற்று மாசுபாடு குறியீடு 400-ஐத் தாண்டினால் அவசர நிலையை அறிவிக்க அரசு தயாராக உள்ளது
September 5, 2026, 10:37 pm
