நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுதந்திர தின ஒற்றுமை ஓட்டம்; மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே முதன்மை இலக்காகும்: எம்பி ராஜா

ரவாங்:

சுதந்திர தின முன்னிட்டு நடத்தப்பட்ட ஒற்றுமை ஓட்டம் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே முதன்மை இலக்காகும்.

ரவாங் நியூ கிரீன் பார்க் மஇகா கிளைத் தலைவர் எம்பி ராஜா இதனை கூறினார்.

நாட்டின் 69ஆவது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவை முன்னிட்டு ரவாங்கில் ஒற்றுமை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட ஓட்டக்காரர்கள் இதில் கலந்து கொண்டனர். 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த போட்டியில் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில மஇகா தலைமை செயலாளர் சசிதரன் இப்போட்டியை தொடக்கி வைத்ததுடன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும். 

குறிப்பாக கடந்த காலங்களை போன்று அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் இந்த ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. ஆக இப்போட்டி வெற்றி பெற ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று எம்பி ராஜா கூறினார்.

இதனிடையே மலேசியர்களிடையே தேசப்பற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை நாம் நேரடியாக பார்க்க முடிகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் தேசியக் கொடியை கூட வீட்டில் பறக்க விடுவது இல்லை.

ஆகையால் மக்களிடையே தேசப்பற்றை அதிகரிக்க இதுபோன்ற நிகழ்வுகள் முக்கிய பங்கை ஆற்றும் என்று சசிதரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset