நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வியடைந்தனர்.

கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் லித்திஹாட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அல் லித்திஹாட் அணியிடம் தோல்வி கண்டனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோல்களை ஜார்ஜ் இலெனிஹேனா அடித்தார்.

கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட பல முன்னணி ஆட்டக்காரர்கள் களமிறங்கியும் அல் நசர் அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் அல் டவுன் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அல் ஃபாதே அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset