செய்திகள் மலேசியா
மலேசியாவுக்கான புதிய இந்திய உயர் ஆணையராக சோம் நாத் கோஷ் நியமனம்: முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் நேரில் சந்தித்து வாழ்த்தினார்
கோலாலம்பூர்:
சோம் நாத் கோஷ் மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவின் இந்திய உயர் ஆணையராக நியமிப்பட்ட சோம் நாத் கோஷ் அவர்களை முக்மின் அமைப்பின் தேசியத் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவுத் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினார்.
சோம் நாத் கோஷ் IFS, சிகாகோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத்தூதராக பணியாற்றி
வந்தார்.
அங்கிருந்து மலேசியாவுக்கான இந்தியத் தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தூதரை சந்தித்த முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பரம் உள்ள பாரம்பரிய தொடர்புகளை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து தமது அமைப்பு தூதரகத்துடன் நட்புணர்வுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இறுதியாக இந்தியாவின் முன்னாள் தூதர் பி. என். ரெட்டிக்கு முக்மின் அமைப்பு டத்தோ வீரா ஷாகுல் தலைமையில் பிரியாவிடை நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
