செய்திகள் மலேசியா
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
சுபாங்:
மலேசிய சிறப்புத் தேடல், மீட்புக் குழு (ஸ்மார்ட்), ஏழு முதல் 10 நாட்கள் வரை நேபாளத்தில் ஒரு மனிதாபிமானப் பணியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை இலாகாவின் (நட்மா) தலைமை இயக்குநர் டத்தோ மியோர் இஸ்மாயில் மியோர் அகிம் இதனை கூறினார்.
நேப்பாளத்திற்கு அனுப்பப்பட்ட 11 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பல்வேறுபட்ட நிபுணத்துவங்களைக் கொண்டுள்ளனர்.
தேடல் மற்றும் மீட்பு நிபுணர்கள், ட்ரோன் செயல்பாடுகள், தளவாடங்கள், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட திறன்கள், பேரிடர் சூழ்நிலைகளில் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்குப் பொருத்தமானவை என்றும் அவர் கூறினார்.
விமானம் இன்று காலை 9 மணிக்கு புறப்பட்டது, மேலும் இது சுமார் ஐந்து மணி நேரம் பயணிக்கும்.
அவர்கள் நேப்பாள நேரப்படி காலை 11 மணிக்கு (மலேசிய நேரப்படி மதியம் 1 மணிக்கு) சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாங்கள் மீட்பு உபகரணங்கள், கண்டறிதல் கருவிகள், தகவல் தொடர்பு அமைப்புகள், அதிக திறன் கொண்ட ட்ரோன்கள், சிறப்பு சுரங்கப்பாதை மீட்பு உபகரணங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 10 டன் எடை கொண்ட ஒரு லாரி உட்பட 12.4 டன் எடையுள்ள பல்வேறு உபகரணங்களை ஏற்றிச் செல்கிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 11:03 am
கோத்தா பாரு நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: இரு சைக்கிளோட்டிகள் பலி
September 5, 2026, 10:42 am
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு NKVE நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி கவிழ்ந்ததால் அனைத்து வழிதடங்களும் பாதிப்பு
September 5, 2026, 10:19 am
சரவாக்கில் கடுமையான புகைமூட்டம்: ஐந்து நாட்களுக்கு 647 பள்ளிகள் மூடல்
September 5, 2026, 10:07 am
