செய்திகள் மலேசியா
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
கோலாலம்பூர்:
16ஆவது பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றுக்கு இடையேயான இடப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள், இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களிடமே விடப்பட வேண்டும்.
அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி இதனை கூறினார்.
கடந்த தேர்தலில் தாங்கள் வென்ற இடங்களைத் தக்கவைத்துக் கொள்வதில் ஒவ்வொரு கட்சிக்கும் நிச்சயமாக ஆர்வம் உண்டு.
ஆனால் அது தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையே ஒரு உடன்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்கக் கூடாது.
பாஸ் கட்சி தான் வென்ற இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது.
அம்னோவும் தான் வென்ற இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் அப்படித்தான்.
ஆனால் அவர்கள் கைகோர்க்க விரும்பினால், இரு தலைவர்களும் அதைப் பற்றிப் பேசட்டும்.
நான் இதில் தலையிட்டால், இது கடினமாகிவிடும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
