செய்திகள் மலேசியா
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
கம்பார்:
மலேசிய ஜெயம் விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர், விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் ஜெயம் பொது ஓட்டப் போட்டி சிறப்புடன் நடைபெற்றது
பேரா, கம்பார் ரகான் மூடா வளாகத்தில் இன்று நடைபெற்ற இந்த ஒட்டப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 350 பேர் கலந்துக் கொண்டனர்.
மலேசிய ஜெயம் கழகத்தின் தலைவர் எஸ். குருசாமி சுப்பிரமணியம் கூறினார்.
இந்நிகழ்வு, பொதுமக்களிடையே உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவள் குறிப்பிட்டார்
மாணவர்களை ஊக்குவிக்க விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும்
மாணவர்களை விளையாட்டுத் துறையில் தொடர்ந்து ஈடுபடச் செய்து, அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் என கிளப் தலைவர் குருசாமி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தைப்பிங், கம்பார், ஈப்போ உள்ளிட்ட சுமார் எட்டு பகுதிகளில் தமது கிளப் சார்பில் தொடர்ந்து விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மாணவர்களை ஊக்கப்படுத்துவதுடன், அவர்களின் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் உருவாக்குவதே இப்போட்டிகளின் முக்கிய நோக்கம் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
