நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீபா இளையோர் கால்பந்து போட்டி; இளம் விளையாட்டாளர்கள் திறமையை வெளிப்படுத்தும் களமாக அமைந்துள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்

ஜார்ஜ்டவுன்:

மீபா இளையோர் கால்பந்து போட்டி இளம் விளையாட்டாளர்கள் திறமையை வெளிப்படுத்தும் களமாக அமைந்துள்ளது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மீபா - ஏய்ம்ஸ்ட் மாநிலங்களுக்கு இடையிலான, 12 வயதிற்கும் கீழ் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான 'தேசிய கால்பந்து போட்டி 2026' இன் தொடக்க விழாவிற்குத் தலைமையேற்று போட்டியைத் தொடக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பங்கேற்கும் சிறுவர்கள், சிறுமிகளின் இளம் கால்பந்து திறமைகளை ஒரே களத்தில் காணும் இந்தபோட்டி சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பினாங்கு போலோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இளம் விளையாட்டாளர்களின் திறமையை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கம், குழு உணர்வு, தலைமைத்துவம், விடாமுயற்சி, விளையாட்டுப் பண்புகளை வளர்க்கும் சிறந்த வாய்ப்பாகவும் அமைகிறது.

இளம் கால்பந்து வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்.

உங்கள் கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணியுங்கள். வெற்றியை மட்டுமல்ல, விளையாட்டின் மூலம் வாழ்க்கையையும் கற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset