நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி இடையேயான உறவு மேலும் பிளவுபடுகிறது.


இதன் காரணமாக சமீபத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் வழக்கத்தை விடக் குறைந்த நேரமே நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து "தகவல் அறிந்த" வட்டாரங்களை மேற்கோள் காட்டி புளூம்பர்க்,

சமீபத்திய ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணிக்கு எதிராக நிறுத்தும் அஹ்மத் ஜாஹித்தின் முடிவே இந்தப் பதற்றத்திற்குக் காரணம் என செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன்பு, பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார், மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கு டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித்தின் அணியின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தபோதிலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவன சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று  ஜசெக கொடுத்த அழுத்தமும் இந்த நிலைமைக்குக் காரணமாக அமைந்தது என அந்த வட்டாரம் கூறியது.

அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகளில், ஒருவர் பிரதமர் பதவியில் நீடிக்கக்கூடிய கால அளவைக் கட்டுப்படுத்துவதும் அடங்கும்.

மடானி அரசு அமைக்கப்பட்டதிலிருந்து, அன்வருக்கும் ஜாஹிதுக்கும் இடையிலான நம்பிக்கை மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset