நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

சுங்கைபூலோவில் 308  உயர் கல்வி மாணவர்களுக்கு  கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.

அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உரையை வாசித்த அவரின் அரசியல் செயலாளர் அய்சுடின் அப்துல் காஃபால் இதனை தெரிவித்தார்.

சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் நான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன்.

அவ்வகையில் இன்று 308 உயர் கல்வி மாணவர்களுக்கு 113,500 ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது.

திறன் மேம்பாட்டு நிதியகம் நடத்திய மாபெரும் விழாவில் இந்நிதி வழங்கப்பட்டது.

மெட்ரிகுலேசன், எஸ்டிபிஎம், டிப்ளோமா, சான்றிதழ், திவேட், இளங்களை ஆகிய உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கு இந்நிதி வழங்கப்பட்டது.

பி40 குடும்பங்களைச் சேர்ந்த அம்மாணவர்கள் கல்வி கட்டணம் அல்லது கல்விக்கான பொருட்கள் வாங்குவதற்கு இப்பணத்தை பயன்படுத்தலாம்.

இந்த நிதியுதவி கற்கும் மாணவர்களுக்கு பெரும் உதவியாகவும் பயனையும் அளிக்கும் நான் நம்புகிறேன்.

இதே போன்று  சுங்கைபூலோவில் பள்ளி மாணவர்களுக்கான உதவி நிதிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

குறிப்பாக மக்கள் நலத் திட்டங்களிலும் கவனம் செலுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset