செய்திகள் மலேசியா
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
கோலாலம்பூர்:
சரவாக் மாநிலத்தில் நிலவி வரும் மிக மோசமான புகைமூட்டச் சூழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நாட்டில் 400ஐ கடந்து காற்றின் தர குறியீடு பதிவானால் அப்பகுதிக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டிலுள்ள வளிமண்டல மற்றும் துப்புரவு இயக்க வழிமுறைகளின் (SOP) அடிப்படையிலேயே இந்த மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுப் பொறுப்பை வகிக்கும்டத்தோஶ்ரீ Arthur Joseph Kurup இந்தத் தகவலை ஊடகவியலாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.
நாடு முழுவதும் உள்ள 68 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
