நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலூர் கெமிலாங் கொடியை பெருமையுடனும் முறையான வழிகாட்டுதல்கள் கொண்டு பறக்கவிடப்பட வேண்டும்: ஏரொன் அகோ டகாங் கருத்து 

கோலாலம்பூர்: 

நாட்டின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் ஜாலூர் கெமிலாங் கொடியை மலேசியர்கள் அனைவரும் பெருமையுடனும் முறையான வழிகாட்டுதல்கள் கொண்டு பறக்கவிட வேண்டும். 

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரொன் அகோ டகாங் இதனை கூறினார். 

ஜாலூர் ஜெமிலாங் என்பது இனம், மதம் அல்லது அரசியல் சார்பு பேதமின்றி அனைத்து மக்களாலும் மதிக்கப்பட வேண்டிய தேசிய இறையாண்மை, கண்ணியம் மற்றும் ஒற்றுமையின் சின்னமாகும்

செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் உட்பட, சமூக ஊடகங்களில் ஜலூர் ஜெமிலாங்கைப் பயன்படுத்தும்போதும் அதே கொள்கைகளைப் பின்பற்றுமாறு  ஏரோன் மக்களுக்கு நினைவூட்டினார்.

தேசிய சின்னத்தை வேண்டுமென்றே அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் செயல்கள், நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே கையாளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset