நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூமிபுத்ரா தொழில்முனைவோர் திட்டத்தில் கடனைப் பெற்று தருவதாக கூறி லஞ்சம் கேட்ட பெண் உரிமையாளர்: ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார் 

கோலாலம்பூர்: 

பூமிபுத்ரா தொழில்முனைவோர்  நிதியுதவி திட்டத்தின் கீழ் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 30,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக நம்பப்படும் ஆலோசனை நிறுவனத்தின் பெண் உரிமையாளர் ஒருவர் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்தச் பெண் சந்தேக நபர், கடந்த செப்டம்பர் 3 அன்று மாலை 6:45 மணியளவில் கோலாலம்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்மணி, ஆயுதம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு இந்த நிதியுதவி மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதற்காக லஞ்சத் தொகையைப் பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்.ஏ.சி.சி  தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற மஜிஸ்திரேட் அலியா அன்வர், சந்தேக நபரை வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஆயுதம் மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனத்தின் உரிமையாளரிடம் இந்த லஞ்சப் பணத்தை அவர் கேட்டுக் பெற்றுள்ளதாகச் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset