செய்திகள் மலேசியா
ஊழல் வழக்குகளில் விசாரணை செய்யப்பட வேண்டிய சந்தேக நபர் இனி ஆரஞ்சு நிற ஆடையை அணிய வேண்டியதில்லை: எம்.ஏ.சி.சி தகவல்
கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழக்கு விசாரணைகளில் விசாரணை செய்யப்பட வேண்டிய சந்தேக நபர் இனி ஆரஞ்சு நிற ஆடையை அணிய வேண்டியதில்லை என்று எம்.ஏ.சி.சி தெரிவித்தது
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக அதன் தலைமை ஆணையர், டத்தோஶ்ரீ அப்துல் ஹலிம் அமான் கூறினார்.
OKS எனப்படும் விசாரணை செய்யப்படும் நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து அண்மையக் காலங்களில் பல தரப்பிலிருந்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அந்த சூழலைக் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோஶ்ரீ அப்துல் ஹலிம் அமான் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
இருப்பினும் எம்.ஏ.சிசியின் சிறையில் இருக்கும் போது மட்டும் அவர்கள் இந்த ஆரஞ்சு நிற உடையை அணிந்திருப்பார்கள் என்று கூறப்பட்டது
அதேவேளையில், கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று எம்.ஏ.சி.சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
கோத்தா பாரு நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: இரு சைக்கிளோட்டிகள் பலி
September 5, 2026, 10:42 am
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு NKVE நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி கவிழ்ந்ததால் அனைத்து வழிதடங்களும் பாதிப்பு
September 5, 2026, 10:19 am
சரவாக்கில் கடுமையான புகைமூட்டம்: ஐந்து நாட்களுக்கு 647 பள்ளிகள் மூடல்
September 5, 2026, 10:07 am
