செய்திகள் மலேசியா
சரவாக்கில் கடுமையான புகைமூட்டம்: ஐந்து நாட்களுக்கு 647 பள்ளிகள் மூடல்
கூச்சிங்:
சரவாக் மாநிலத்தில் கடுமையான புகைமூட்டம் காரணமாக ஐந்து நாட்களுக்கு அம்மாநிலத்தில் உள்ள 647 பள்ளிகள் மூடப்படுவதாக சரவாக மாநில கல்வி இலாகா உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 7 முதல் 11 ஆம் தேதி வரை இந்த அதிரடி நடவடிக்கை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மாணவர்களின் கல்வியைப் பாதிக்காத வண்ணம் வீட்டிலிருந்தே கற்றல்- கற்பித்தல் நடவடிக்கைகள் நடைமுறைத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
பாதிக்கப்பட்டுள்ள இந்தச் பள்ளிகளில் மொத்தம் 563 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 108,477 மாணவர்களும், 84 இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 90,082 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவர்களின் பாதுகாப்பும் சுகாதார நலனும் தான் தற்போதைக்கு முக்கியமான ஒன்றாகும் என்று சரவாக் மாநில கல்வி இலாகா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
தற்போதைய சூழலில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் உடல்நலனில் அதிக கவனம் செலுத்துமாறும், வானிலை மாற்றங்கள் குறித்து வான்வழி மாசு மேலாண்மை அமைப்பின் மூலமாகத் தகவல்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
கோத்தா பாரு நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: இரு சைக்கிளோட்டிகள் பலி
September 5, 2026, 10:42 am
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு NKVE நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி கவிழ்ந்ததால் அனைத்து வழிதடங்களும் பாதிப்பு
September 5, 2026, 10:07 am
