செய்திகள் மலேசியா
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு NKVE நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி கவிழ்ந்ததால் அனைத்து வழிதடங்களும் பாதிப்பு
கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியின் புதிய NKVE நெடுஞ்சாலையில் நேற்றிரவு பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது
இந்த சாலை விபத்தில் லாரி ஒன்று கவிழ்ந்ததில் NKVE வழித்தடங்கள் மூடியதால் வடக்கு நோக்கிய போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது.
கோழி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளதாக PLUS TRAFIK அறிவித்த வேளையில் தெற்கு நோக்கிய வலது பக்க வழியும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் சிக்கித் தவித்த சில பொதுமக்கள், விபத்துக்குள்ளான லாரி மற்றும் அப்பகுதியில் ஏற்பட்ட சேதங்களைச் சமூக வலைத்தளங்களில் படங்களாகப் பகிர்ந்துள்ளனர்.
அந்த லாரியில் கோழிகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் படங்கள் வைரலாகி வருகின்றன
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
கோத்தா பாரு நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: இரு சைக்கிளோட்டிகள் பலி
September 5, 2026, 10:19 am
சரவாக்கில் கடுமையான புகைமூட்டம்: ஐந்து நாட்களுக்கு 647 பள்ளிகள் மூடல்
September 5, 2026, 10:07 am
