நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேபாளப் பேரிடர்: மலேசியாவின் ஸ்மார்ட் குழு உறுப்பினர்கள் நேபாளத்திற்கு கிளம்பினர்

கோலாலம்பூர்: 

நேப்பாளத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான இயற்கை பேரிடரைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க மலேசியாவின் பேரிடர் மீட்புக் குழுவான ஸ்மார்ட் குழு முதற்கட்டமாக அதன் 11  உறுப்பினர்களை நேப்பாளத்திற்கு அனுப்பியுள்ளது. 

இந்த மீட்புக் குழுவினர் இன்று காலை சுமார் 9 மணியளவில் சுபாங் தற்காப்புப் படை விமானப் தளத்திலிருந்து மலேசிய வான்படைக்குச் சொந்தமான பிரம்மாண்டமான A400M விமானம் மூலம் பயணமாகினர்.

அவர்களை தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைமை இயக்குநர் டத்தோ மியொர் இஸ்மாயில் மியோர் அகிம் தலைமையேற்று வழியனுப்பி வைத்தார். 

நேபாள நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பேரிடர் மற்றும் அவசர நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, மலேசிய அரசாங்கம் இந்த உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மலேசிய நாட்டின் நற்பெயரைக் காக்கும் வகையில் இந்தச் சிறப்புப் படை அங்கு தீவிரமாகச் செயலாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset