செய்திகள் உலகம்
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
காட்மண்டு:
நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேபாள பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உள்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.
இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,
“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.
நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ள பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
தக்காளியால் சிவந்த சாலைகள்: தக்காளிச் சண்டையில் 20,000 பேர்
August 30, 2026, 10:07 am
ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லாக் கப்பல்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுத்தப்படும்: சிங்கப்பூர் அறிவிப்பு
August 29, 2026, 4:48 pm
