நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் செரியான் வட்டாரத்தில் மாமன்னர் அவசர நிலையை அறிவித்தார்

கோலாலம்பூர்:

பொதுமக்களின் உடல்நலம், பாதுகாப்பிற்கு அபாயகரமான அளவிற்கு காற்று மாசுபாடு அதிகரித்துள்ள புகைமூட்டச் சூழ்நிலையைத் தொடர்ந்து மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், சரவாக்கின் செரியான் வட்டாரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபெங் ஆகியோரின் ஆலோசனைகளையும், சம்பந்தப்பட்ட முகமைகளின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் உடல்நலம் மற்றும் நலனைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகள் மேலும் திறம்பட எடுக்கப்படும்.

அரசாங்கம் அவ்வப்போது சூழ்நிலையின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

தணிப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்குத் தகவல் மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

அரசாங்கம் அவ்வப்போது நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, தணிப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்குத் தகவல், சுகாதார ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்ட அனைத்துத் தேவையான நடவடிக்கைகளும் உடனடியாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset