நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷா ஆலாம், தாமான் ஆலாம் மேகாவில் நிகழ்ந்த கும்பல் மோதல்: இரு சகோதரர்கள் உட்பட 8 பேர் ஆடவரைக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு 

ஷா ஆலாம்: 

கடந்த மாதம் ஷா ஆலாம்,  தாமான் ஆலாம் மேகாவில் நிகழ்ந்த கும்பல் மோதலில் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குண்டர் கும்பலைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உட்பட எட்டு நபர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது 

குற்றம் சாட்டப்பட்ட Shaik Hasanudin Ahlauwudin, (26) அவரின் சகோதரர் Sheikh Mauludin, (24) Soulami Ahimsha (46), SR Harikrisnan, (42), MK Puwaneswaran (39), A Rhubban (37), K Thivagar, (29),  மற்றும் R Darvin Raj, (23),  ஆகிய எட்டு பேரும் நீதிபதி சிந்தியா நூர் ஹைசியான் சுலைமான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புரிந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.

கொலை வழக்குகள் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றவியல் சட்டத்தின் 149-வது பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றவியல் சட்டத்தின் 302-வது கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 12 கசையடிகளுக்குக் குறையாமல் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிற்பகல் 1.59 மணியளவில் தாமான் ஆலாம் மேகா, ஜாலான் மாண்டோலினில் கணேசன் (23) என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் எவருக்கும் பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், வழக்கின் மறு விசாரணைக்காக அக்டோபர் 13-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

-நம்பிக்கை செய்திப்பிரிவு 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset